யாழில் இருந்து பதுளைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேரூந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
குறித்த விபத்தினுள் 13 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பதுளைக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.
இவ்வாறு திரும்பிக் கொண்டிருந்த சமயம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைத் தூக்கம் காரணமாக திருப்பத்தில் பேரூந்து தடம்புரண்டதாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக