வடமாகாணத்துக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரித்தானியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் சிறிலங்காவுக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2011ம் ஆண்டு வடக்கிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட போது,அதனை பிரித்தானியா வரவேற்றிருந்தது.
இது பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு, யுத்தம் நிறைவடைந்த பின்னரான நல்லிணக்க நடவடிக்கை தொடர்பான சாதகமான சமிஞ்கையை அனுப்பி இருந்தது.
எனினும் மீண்டும் இப்போது இந்த தடை அமுலாக்கப்பட்டுள்ளமையானது, வெளிநாடுகளுக்கு சிறிலங்கா தொடர்பில் பிழையான சமிஞ்கையை அனுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் குறித்த தடையை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக