siruppiddy

புதன், 18 நவம்பர், 2015

இனி இணையத்தில் லஞ்ச முறைப்பாடுகள் செய்யும் வசதி அறிமுகம்!

லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைகுழு ,மக்களின் முறைப்பாடுகளை,இணையத்தளத்தின் ஊடாக அப்லோட் செய்யும் வசதிகளை, மக்களுக்குபெற்றுக்கொடுப்பதற்கு, தீர்மானித்துள்ளது.அடுத்த மாதம் 9ம் திகதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
, ஜனாதிபதி
 மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையில் “,ஐ செட் எ ப்ரைபரி” என்ற இந்த இணையத்தளம் ,ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது என லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இப்புதிய இணையத்தளத்தில் லஞ்சம் சம்பந்த்தப்பட்ட
 கொடுக்கல் 
வாங்கல்கள் ,அடங்கிய வீடியோ ஒலிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை ,முறைப்பாடுகளின் சாட்சிகளாக அனுப்பவும் வசதிகள் உண்டு.இவ்வாறு இணையத்தளத்தின் ஊடாக அனுப்பப்படும் முறைப்பாடுகளை பரீசீலிக்க தனியான ஒரு பிரிவும் ஒழுங்கு செய்ய திட்டமிடப்பட்டிள்ளது.
எது எவ்வாறு இருப்பினும்,இந்த இணையத்தளத்தினூடாக போலியான முறைப்பாடுகள் அனுப்பப்படுமிடத்து, அந்த முறைப்பாட்டை செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு,குற்றம் 
ஒப்புவிக்கப்படின்
 10 வருட சிறைத்தண்டனைக்கும்
 உள்ளாக, இடம் உள்ளதாக ,ஆணைக்குழுவின் அத்தியட்சகர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,”இந்த இணையத்தள செயற்பாடுகள்
 முதலாவதாக
 இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உலகின் பல நாடுகளில் இவ்வாறான முறை நடை முறையில் உள்ளதாகவும் கூறினார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக