siruppiddy

புதன், 2 மார்ச், 2016

முகப்புத்தகப் பயன்பாடு இலங்கையில் உயர்வு

இலங்கையில் சமூக வலையமைப்பு பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அதிலும் முகப்புத்தகப் பயன்பாடு துரித கதியில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பீட பீடாதிபதி கலாநிதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் முகப் புத்தகப் பயன்பாடு 92.63 வீதமாக உயர்வடைந்துள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கையின் சனத் தொகை 20.36 மில்லியனாக உயர்வடைந்துள்ளது.
இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 4.79 மில்லியன் எனவும், சமூக வலைத்தளப் பயன்பாட்டின் எண்ணிக்கை 2.80 மில்லியன் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் முகப்புத்தகப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையே அதிகளவில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக