siruppiddy

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஜனகபுர பொலிசாரைத் தாக்கிய 2 பெண்கள் உட்பட 18 பேர் கைது!

பொலிசார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிஓயா ஜனகபுர பிரதேசத்தில் இன்று சம்பவம் 
நடைபெற்றுள்ளது
நேற்றிரவு அப்பிரதேசத்தில் கேரள கஞ்சா விற்பனை செய்த நபரொருவரைக் கைது செய்வதற்காக சென்றிருந்த நேரத்தில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் காரணமாக பொலிஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ள அதேநேரம் இரண்டு பொலிசாரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இன்று மேற்கொள்ளப்பட்ட 
விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிசாரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் 18 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் பெண்களாவா்.கைது செய்யப்பட்டவா்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக