கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற புகையிரத்துடன் சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் சைக்கிள், மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் 22 மீற்றர் தூரத்துக்கும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் 174 மீற்றருக்கும் அப்பால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மதுரங்குளி விருதோடைக் கிராமத்தைச் சேர்ந்த முகம்மது நிஜாம் முகம்மது முபாஸ் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக