யாழ். நவக்கிரி புத்தூர் பகுதியில் மேசன் தொழிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த தொழிலாளியொருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு நவக்கிரி பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் இராமன் சந்துரு (54) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர், நவக்கிரி பகுதியில் தங்கியிருந்து மேசன் தொழில் செய்து வந்திருக்கிறார். வேலை முடிந்து, துவிச்சக்கரவண்டியில் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பது தெரிய வந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக