இலங்கை உட்பட்ட தென்னாசிய நாடுகளில் வசிப்போர் மத்தியில் இளம் வயதிலேயே இருதய நோய்கள் ஏற்படுவதற்கான உயர் அச்சநிலை தோன்றியுள்ளது.
ஸ்டான்டர்ட் சௌத் ஏசியன் ட்ரான்ஸ்லேசனல் ஹாட் இனிசியேட்டிவ் என்ற அமைப்பு தமது அறிக்கை ஒன்றில் இந்த அச்சத்தை வெளியிட்டுள்ளது.
பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே இந்த நோய்த்தாக்கம் அதிகமாக ஏற்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான்,
நேபாளம், பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் பொதுவாக ஏற்படும் இருதய நோய்களை காட்டிலும் நான்கு மடங்கு இருதய நோய்கள் ஏற்படு;ம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 வயதுக்கு குறைந்தவர்களுக்கே இந்த அச்சம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தென்னாசியாவில் இருதய நோய்கள் ஏற்படுவதற்காக 5 காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
1.சிறுவயதிலேயே தேவையற்ற கொழுப்பு ( bad cholesterol ) கொழுப்பார்ந்த புரதங்கள் அதிகளவில் காணப்படுகிறது.
2.அமினோஅசிட்டின் அளவு அதிகளவில் காணப்படுகிறது.
3.இருதயநோய் மற்றும்; சலரோகம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய புரதத்தின் அளவு அதிகளவல் காணப்படுதல்.
4. Metabolic Syndrome ( அனுசேப குணங்குறிகள்)
5. வயிற்றில் படியும் கொழுப்பினால் ஏற்படும் உடல் பருமன் போன்றவையே அந்த 5 காரணங்களாகும் என்று ஸ்டான்டர்ட் சௌத் ஏசியன் ட்ரான்ஸ்லேசனல் ஹாட் இனிசியேட்டிவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக