பீகார் மாநிலத்தை சேர்ந்த பொண்டகாவின் மகன் சீதாராம் (வயது 18). கொத்தனாரான சீதாராம், கர்நாடக மாநிலம் மைசூருவில் தனது தந்தையுடன் தங்கியிருந்து, தனியார் நிறுவனம் நடத்தி வரும் சாலைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் பணி முடித்து வீட்டுக்கு வந்த சீதாராம், தனது செல்போனை சார்ஜ் ஏற்றுவதற்காக சார்ஜரில் பொருத்தி மின் இணைப்பு கொடுத்திருந்தார். சிறிது நேரத்தில் அவரது நண்பரிடமிருந்து போன் வந்தது.உடனே செல்போனை எடுத்த அவர் மின் இணைப்பை துண்டிக்காமல் சார்ஜ் ஏறும் நிலையிலேயே பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரது செல்போன் வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் அவரது மூக்கு, நெற்றி, கன்னம் என முகம் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொண்டகா, சீதாராமை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக