குழந்தைகளுக்குப் புற்றுநோய் சிகிச்சை அளித்து குணமானாலும் கதிர்வீச்சு காரணமாக மற்ற பகுதிகள் பாதிக்கப்பட்டால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆனால், புரோட்டான் தெரப்பியில் இந்தப் பாதிப்பு குறைவு. சாதாரணமாக வந்து சிகிச்சை எடுத்துச் செல்லலாம். இந்த சிகிச்சையின் மூலம், மிகச்சிறந்த வாழ்க்கைத்தரத்தை நோயாளிகள் நிச்சயம் பெற முடியும்.” என்றார்.
புரோட்டான் தெரப்பியின் செயல்பாடு!
தற்போதைய கதிரியக்க சிகிச்சையில் போட்டான்கள் (Photons) பயன்படுத்தப்படுகின்றன. நவீன புரோட்டான் தெரப்பியில், போட்டான்களுக்குப் பதிலாக புரோட்டான்கள் பயன்படுத்தப்படும். மிகப்பெரும் வலிமைகொண்ட இந்த புரோட்டான்கள், ஹைட்ரஜன்
அணுவில் இருந்து பிரிக்கப்பட்டு, சைக்ளோட்ரான் எனும் கருவியின் வழியாக, அதிவேகமாகச் சுழற்றப்படும். பிறகு, அயனிக்கற்றை அறை (Beam room) வழியாக செலுத்தப்பட்டு, புற்றுநோய் கட்டியின்
வடிவத்துக்கு
ஏற்றவாறு கேன்ட்ரி அறையில் (Gantry Room) மாற்றியமைக்கப்படும். அடுத்து, நாசில் வழியாக நோயாளியின் உடலில் புற்றுநோய் செல்கள் இருக்கும் இடத்தின் மேல் செலுத்தப்பட்டு, அந்த செல்களை மட்டும் குறிவைத்து அழிக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக