siruppiddy

வியாழன், 24 செப்டம்பர், 2015

மாபெரும் நடைபவனி இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்ட மாபெரும் நடைபவனி இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இன்று பாடசாலை சமூகத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட மாபெரும் நடைபவனியில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.
 பாடசாலையின் 125 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் ஊர்திகள், தமிழர் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள் என்பனவும் பேரணியில் இடம்பெற்றன. பாடசாலை முன்றிலிலிருந்து ஆரம்பமான
 நடைபவனி கே.கே.எஸ். வீதி வழியே பயணித்து ஆஸ்பத்திரி வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு வீதியை அடைந்து வேம்படி, மத்திய கல்லூரி வீதி 
வழியாக பலாலி வீதியை அடைந்து அங்கிருந்து கந்தர்டம் வீதியை அடைந்து யாழ்.இந்து மகளிர் கல்லூரி வழியாக கஸ்தூரியார் வீதியை அடைந்து அங்கிருந்து யாழ். இந்துக் கல்லூரியின் மைதானத்தில் வந்து நிறைவடைந்தது. நடைபவனி வந்த பாதைகளில் இருந்த யாழ். மத்திய 
கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரிகள் 
தத்தமது பாடசாலை வாயில் வைத்து நடைபவனியை வரவேற்றன. யாழ். இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் 22 திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக