யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10.30 அளவில் யாழ். நகரப்பகுதியில் உள்ள பிரபல விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்திய இளைஞர்கள் குறித்த வைத்தியரைத் தாக்கியுள்ளனர். மேலும் அவர் வசமிருந்த 23,500 ருபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியினையும் கொள்ளையிட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்காகிய வைத்தியர் நேற்று வெள்ளிக்கிழமை (14) யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பிரகாரம் யாழ். பிறவுண் வீதிப்பகுதியைச் சேர்ந்த 28 வயது மற்றும் 35 வயதுடைய இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக