யாழ். சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் தாயும் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தை தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடு கிடைத்திருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று சந்கேநபர்களை கைது செய்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
சந்தேகநபர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக