
யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் க. பொ.த உயர்தரத்தில் கல்வி பயின்று 'வயம்ப' பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவனான மு. நவரத்தின கஜன் தனது 21 ஆவது வயதில் பொறியியல் தொழில் நுட்ப பாடத்தில் ஒரு பகுதியான 'நில அளவை' என்ற நூலை வெளியீடு செய்து சாதனை படைத்து, கல்வியிலாளர்கள் உட்படப் பலரதும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார்.
மேற்படி நூலின் வெளியீட்டு விழா இன்று (05) முற்பகல் யாழ். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ துர்க்கா பொதுநோக்கு மண்டபத்தில் ஓய்வு நிலை...