ஏனைய நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு அதிசிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனமானது Galaxy Core என்ற டுவல் சிம் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
4.3 அங்குல அளவுடைய WVGA தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 768MB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சேமிப்புக் கொள்ளளவை microSD கார்ட்களின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, GPS வசதி, Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளதுடன் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 320 யூரோக்கள் ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக