திருச்சியில் காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (24) என்பவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கண்டித்துள்ளனர்.
சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று (திங்கள்கிழமை) வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
எடமலைப்பட்டிபுதூர் பொலிஸார் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக