siruppiddy

சனி, 8 மார்ச், 2014

கண்ணீர் அஞ்சலி அமரர் திரு நடராசா அற்புதராசா

                              தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
  காலை ஒரு செய்தி வந்து
 நாவை அடைத்துக் கொண்டது
 கண்கள் தானாகப் பெருக்கெடுத்தது
 நம்ப முடியவில்லை
 உங்கள் சிரிப்பொலிகள்
 மட்டும் எங்களுக்கு நினைவிருகின்றது
அதகுள் ஒரு செய்தியா
 உங்களை காலன் கொண்டு போய் விட்டானா
 என்ன கொடுமை எங்களால் நம்ப முடியவில்லையே
 தோப்பு பெற்றெடுத்த அற்புதராசா
 உங்களை இந்த உலகை விட்டு
 அழைத்துச் சென்றவன் யாரைய்யா
 உங்களை இழந்து வாட வைத்தவனும் யாரைய்யா
 மனது கேட்கவில்லை மன்றாட யாருமே இல்லை
 உங்களை இழந்ததினால்
 உங்களை பெற்றெடுத்ததோப்பு மண்ணும்
 வாழவைத்த நவக்கிரி மண்ணும்
 கதறி அழுகின்றதே
 தேற்ற வரமாட்டீர்களா
 உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
உற்றார்  உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த
 இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக