siruppiddy

திங்கள், 26 ஜனவரி, 2015

இடையூறு விளைவித்தமை பொலிஸ் அதிகாரிக்கு சிறை??

வெலிகடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கமல் ரஷிக அமரசிங்கவிற்கு நுவரெலிய நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹட்டன் சமவெளி தேசிய பூங்காவில்  2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி அனுமதியின்றி நுழைந்தமை மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட...

திங்கள், 19 ஜனவரி, 2015

திருமணநாள் வாழ்த்துகள் சுதா ஜசோதா 19.01.15.

பதின்மூன்றாவது திருமணநாள் சுதா ஜசோதா இன்று. 19.01.2015. யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...

செவ்வாய், 6 ஜனவரி, 2015

வீதிகள் யாழ். நகரில் நாளை முதல் மூடப்படுகின்றன!

   ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையமாக இயங்கவுள்ளதால் இந்தப் பகுதியிலுள்ள சில வீதிகள் மக்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்டப் பிரதி பொலிஸ்மா அதிபர் வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.  இதன்படி, காந்தி வீதி (மணிக்கூட்டு வீதி), முதலாம் குறுக்கு வீதி, நீதிமன்ற வீதி, சுப்பிரமணியம் பூங்கா வீதி, புல்லுக்குளம் முதல் வேம்படி வரையான வீதி ஆகிய 5 வீதிகளே தற்காலிகமாக மூடப்படவுள்ளன இந்த வீதிகள்...

வெள்ளி, 2 ஜனவரி, 2015

இரட்டைக் குடியுரிமை இலங்கை வழங்கத் தீர்மானம்``

பத்து நாடுகளின் இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பத்து நாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்கள், இலங்கையில் குடியுரிமை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகள் பின்னரே கடந்த காலங்களில் இலங்கைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். எனினும், எதிர்வரும் காலங்களில் இலகுவான முறையில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்...