siruppiddy

புதன், 28 செப்டம்பர், 2016

கேரளா கஞ்சா மருதங்கேணி கடற்கரையில் மீட்பு!

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவை மருதங்கேணி கடற்கரையில் வைத்து பளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.எனினும் குறித்த சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பளைப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய  வருவதாவது, இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரள கஞ்சா ஒரு தொகுதி மருதங்கேணி கடற்பரப்பினூடாக கொண்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதைத்...

திங்கள், 26 செப்டம்பர், 2016

சிறுவர்கள் வாகன விபத்தில் பரிதாபகரமாக பலி !

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக முறையில் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (25) பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்களும் உயிர் இழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் கூறியுள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று...

அமரர் இரத்தினம் பாலகிருஷ்ணன்.1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு : 7 யூலை 1960 — இறப்பு : 24 செப்ரெம்பர் 2015 யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பாலகிருஷ்ணன். (செல்வம்) அவர்களின் முதலாம்ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் அன்பு அப்பாவே  இதயத் துடிப்பின் அருமருந்தே  காலம் செய்த கோலத்தினால்  ஓவ்வொரு கணப் பொழுதும்  துடிக்கின்றோம்! ஆண்டொன்று ஆனாலும் மனம்  ஆற மறுக்கிறது- அப்பா  புன்னகை புரியும் உங்கள்  முகம்...

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லுாரியின் மாணவி தற்கொலை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை – நகுலேஸ்வரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை மஹாஜன கல்லூரியில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் போது வீட்டில் அவரது பெற்றோர் இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது. மன உளைச்சல் காரணமாக குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறை...

புதன், 21 செப்டம்பர், 2016

இலங்கைத் தமிழர் அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி !

அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் டாங்கிகள் வடிவமைப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்  கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பட்டம் பெற்றதுடன், 1982-83...

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

மரண அறிவித்தல் திரு மகிந்தன் பன்னீர்ச்செல்வம்(முகுந்தன்)

தோற்றம் : 20 யூன் 1972 — மறைவு : 10 செப்ரெம்பர் 2016 யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Helsingborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தன் பன்னீர்ச்செல்வம்.(முகுந்தன் முன்னாள் விளையாட்டு மூத்த உறுப்பினர் - Helsingborg)அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம், புஸ்பலீலா(இந்தியா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அழகசுந்தரம், சாந்தகுமாரி(சுவீடன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், சர்மிளா...

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மரண அறிவித்தல் திரு கந்தையா தம்பிஐயா.06.'09.16.

பிறப்பு : 3 யூன் 1924 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2016 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிஐயா அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், ஜெகதீஷ்வரன், ஜெகதீஷ்வரி, மலர்சோதி, தயாபரன், அருளானந்தம்,...