siruppiddy

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

வீதிகளில் தரிப்பிடம் இல்லாதஇடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட தீர்மானம்

கொழும்பு காலி வீதி மற்றும் ஆர். ஏ. டி மெல் மாவத்தை ஆகிய பாதைகளின் இரு மருங்கு மற்றும் குறித்த வீதிகள் தொடர்புபடும் அனைத்து கிளை வீதிகளின் இரு மருங்குகளிலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடுவதற்கு கொழும்பு மாநகர சபை 
தீர்மானித்துள்ளது.
அதற்கமைய தெஹிவளை மேம்பாலம் தொடக்கம் கலதாரி சுற்றுவட்டம் வரையும், ஆர். ஏ. டி மெல் மாவத்தையில் தம்மாராம வீதி தொடக்கம் லிபேட்டி சுற்றுவட்டம் வரையும் எந்த இடத்திலாவது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாலும் கட்டணம் 
அறவிடப்படவுள்ளது.
குறித்த பிரதான வீதிகளுக்கு மேலதிகமாக அந்த பாதையுடன் தொடர்புபடும் கிளை வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல்கள் இன்று அப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த அறிவித்தலுக்கு அமைய,
மோட்டார் சைக்கிளில் ஒன்று ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 10 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
கார் ஒன்று ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 30 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
முச்சக்கரவண்டி ஒன்றுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 20 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
அனைத்துவிதமான லொறி வகைகளும் ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 50 ரூபாய் அறவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கொழும்பு மாநகர சபை இத்திட்டத்தை இன்று தொடக்கம் 
முன்னெடுக்கவுள்ளது.
மிகவும் சிறந்த சாலை ஒழுக்கம் மற்றும் மிகவும் முன்னேற்றகரமான வாகன தரிப்பிடம் திட்டத்தின் ஊடாக கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைப்பது இத்திட்டத்தின் நோக்கம் என அந்த அறிவித்தலில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினம் தோறும் கொழும்பு காரியாலயங்களில் தொழில் நிமித்தம் வருகை தரும் வாகன உரிமையாளர்கள் இத்திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதோடு,இத்திட்டத்தின் காரணமாக தாம் தினமும் 250 ரூபாய் செலவிடவேண்டியுள்ளதாகவும் அவர்கள் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 23 டிசம்பர், 2015

மாணவர்களுக்கு ஹெரோயின் விற்க முயன்றவர்கள் கைது


யாழ்.பாடசாலை ஒன்றின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்.பொலிஸாரினால் 4 சந்தேக நபர்கள் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது, இவர்களின் உடமையில் இருந்து 9கட்டு ஹெரோயின் பைகளினையும் பொலிஸார் 
மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் சங்கரப்பிள்ளை வீதி, ஆணைக்கோட்டை, மற்றும் இனுவில் தெற்கு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் கூறினார்.
நீண்டகாலமாக குறித்த நபர்கள் மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு புலணாய்வு பரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றிருந்தது.
பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் அவதானிக்கப்பட்டு வந்த இவர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக இரகசிய தகவல் 
கிடைக்கபெற்றிருந்தது.
குறித்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார், பிரதான சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன்,அவர் மூலம் ஏனைய மூவரையும் கைது செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

புதன், 9 டிசம்பர், 2015

பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்னை இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் வியாபார நிலையம் ஒன்றிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர்.
குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருநெல்வேலி சந்திப் பகுதியில் உள்ள கண்ணன் ஸ்ரோர்ஸ் என்னும் வியாபார நிலையத்தில் பெண்ணெருவர் நீண்ட காலமாக 
பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வியாபார நடவடிக்கையில் கிடைக்கப்பெற்ற பணத்தில் 3 இலட்சம் ரூபா தவறவிடப்பட்டுள்ளது என்று கூறி அப்பெண்ணை அச்சுறுத்திய வியாபார நிலைய உரிமையாளர் அப்பெண்ணை வியாபார நிலையத்தில் வைத்துப்
 பூட்டியுள்ளார்.
இரவாகியும் மகள் வீட்டிற்கு வராத காரணத்தினால் அப் பெண்ணின் தாயார் அவர் பணியாற்றும் வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற தாயார் தனது மகள் எங்கே என்று வியாபார நிலைய உரிமையாளரை கேட்ட போது, 'இன்றைய நாள் கணக்கினை பார்த்துக் கொண்டு 
இருக்கின்றார் 
சிறிது நேரத்தில் வந்துவிடுவார்' என்று கூறியுள்ளார்.உரிமையாளரின் பதிலை கேட்டு நீண்ட நேரமாக தாயார் அங்கேயே நின்று கொண்டிருந்துள்ளார். இருப்பினும் மகள் வெளியில் 
வரவே இல்லை.
திடீரென வியாபார நிலையத்திற்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்த அப் பெண் அவலக் குரல் எழுப்பியுள்ளார். தனது மகளுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டது என்று அறிந்து கொண்ட தாயார் தானும் அங்கே நின்று அவலக் கூரல் எழுப்பியுள்ளார்.அவர்களது அவலக் குரல் கேட்டு அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். வீதியால் சென்றவர்களும் அங்கு வந்து ஒன்று கூடியுள்ளனர்.
வியாபார நிலையத்திற்குள் இருந்து தொடர்ந்து பெண்ணின் அவலக் குரல் வருவதை அவதானித்த பொது மக்கள் கடையினை முற்றுகையிட்டு உள்ளே சென்று பெண்ணை மீட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கோப்பாய்ப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ 
இடத்திற்கு
 வந்த பொலிஸார் வியாபார நிலைய உரிமையாளருடன்  பேசிய பின்னர் அப் பெண்ணையும் பெண்ணின் தாயாரையும் வீட்டிற்கு 
அனுப்பிவைத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் ஸ்தலத்திலே பலி !!!

யாழ்.புத்தூர் மீசாலை வீதியில்  இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே
  உயிரிழந்துள்ளனர்.
 இச்சம்பவத்தில் சின்னகுஞ்சு உதயராசா (வயது – 55), ஜேசு அன்பு (வயது – 25) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் பயணித்த பேரூந்துடன் 
மோதியதால்
 இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 3 டிசம்பர், 2015

பெண் துஷ்பிரயோகித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.!!!

ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று திரும்பிய 18 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மஹியங்கணையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் வேவத்தை, கந்தல்கும்புரவைச் சேர்ந்த ரம்யா விதர்ஷிணி எனும் 18 வயதான  பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 3 மாதங்களாக ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளதோடு, இதற்காக ரிதிமாலியத்த, அலுகெட்டியாவ பிரதேசத்திலுள்ள தனது தாயின் சகோதரரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
நேற்று முன்தினம் (01) பிற்பகல், வேலை முடிந்து திரும்ப வேண்டிய விதர்ஷிணி வீட்டுக்கு வராததால், அவரது மாமா உள்ளிட்ட அவரது உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் இணைந்து அவரை தேடியுள்ளனர்.
இதன்போது, விதர்ஷிணியின் மாமாவின் வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், அவரது கையடக்க தொலைபேசி மற்றும் அவரது குடை என்பன வீசப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.
அதனை அடுத்து, இது குறித்து மஹியங்கணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதோடு, பொலிஸார் மற்றும் கிராமவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர், குறித்த 
பகுதியிலுள்ள
 தேக்கு மரச்செய்கை காட்டினுள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மஹியங்கணை பொலிஸார், இது குறித்து இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும், இச்சம்பவம் குறித்தான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் 
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 28 நவம்பர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு. திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா (28.11.15)

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமககொண்ட  திரு  திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி )  என்பதாவது 
பிறந்த நாள் இன்று 28.11.2015 .இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள் 
  பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  உடுவில் முருக மூர்த்தி ஆசியுடன்
சகல வளங்களும் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 21 நவம்பர், 2015

மது போதையில் இளைஞர்கள் வீதியில் பெரும் அட்டகாசம் !!!

மதுபோதையில் காரில் வந்த குழுவினர் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தமையினால் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் திருநெல்வேலி தபால்க்கட்டை சந்தியில்  (18,11.2015,புதன்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் முயற்சி குறித்து மேலும் தெரியவருவதாவது :-
தபால்கட்டை சந்தியில் உள்ள ஒழுங்கையில் இருந்து இளைஞர் ஒருவர் பலாலி வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்டவேளை பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தி பக்கம் இருந்து கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
அதனால் குறித்த இளைஞர் கார் சென்ற பின்னர் மோட்டார் சைக்கிளை செலுத்தும் நோக்குடன் ஒழுங்கை முகப்பில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பார்த்துக்கொண்டு நின்றுள்ளார்.
அவ்வேளை காரில் வந்தவர்கள் திடீர் என்று இளைஞருக்கு அருகில் காரினை நிறுத்தி என்ன பார்க்கின்றாய் என தகாத வார்த்தைகளால் ஏசியவாறு காரை விட்டு இறங்கி மதுபான போத்தல்களை வீதியில் 
உடைத்துள்ளனர்.
அதனால் பயந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டு விட்டு ஒழுங்கைக்குள் ஓடியுள்ளார். அதனைத் தொடர்ந்து காரில் வந்த குழுவினர் வீதியில் மது போத்தல்களை அடித்து உடைத்ததுடன், இளைஞரின் மோட்டார் சைக்கிளையும் அடித்து நெருக்கி விட்டு அங்கிருந்து
 சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னை ,,,,,,,எனும் இலக்கமுடைய காரில் வந்தவர்களே தாக்க முற்பட்டதாக பொலிசாரிடம் குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தப்பி சென்ற காரினை தேடும் நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>