பொதுமக்கள் முன்பாக பங்களாதேசில் கடந்த ஆண்டு, இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கில், எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.பங்களாதேசில், கடந்த ஆண்டு, டிச., 9ம் தேதி நடந்த, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது, ஆளும், "அவாமி லீக்' கட்சியைச் சேர்ந்தவர்கள், தாகா நகரில், பகதூர் ஷா பூங்காவில், விஸ்வஜித் என்பவரை கொலை செய்தனர். இந்த சம்பவம், பங்களாதேசில் "டிவி'க்களில், நேரடியாக
ஒளிபரப்பானதையடுத்து, கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், இந்த வழக்கை, தாகா நகர நீதிபதி, நிஜாமுல் ஹக், 10 நிமிடங்களில் விசாரித்து முடித்து, தண்டனை வழங்கினார்.
பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், விஸ்வஜித்தை கொலை செய்த, ஆளும் கட்சியின், மாணவர் அணியைச் சேர்ந்த, எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக