
ஐந்து ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட நவக்கிரி மூலிகைத் தோட்டத்திற்கு படை முகாம்கள் தடையாக உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் வடக்கு மாகாண சுதேச மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.அதுமட்டுமல்லாது இந்தியாவிலிருந்தே ஆயுள் வேத மூலிகைப் பொருட்கள்...