siruppiddy

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

யாழ்தேவியுடன் கார் மோதி நால்வர் உயிரிழப்பு

 கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில், புகையிரதத்துடன் கார் மோதி விபத்திற்குள்ளாகியதில், நால்வர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புகையிரதத்துடன், கார் மோதியதில் இன்று பிற்பகல் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் நால்வரும் களுத்துறை பகுதியைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து...

விபத்தில் இரு தமிழ் இளைஞர்கள் பலி

பிரான்சில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்தில் இரு தமிழர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 34 மற்றும் 21 வயதுடைய தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் இந்தக் கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

திங்கள், 20 ஏப்ரல், 2015

காதலியுடன் திருமணம் அதே நாளில் இன்னொரு பெண்ணுடன் ஓட்டம்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே திருமண நாளில் காதலியை கைவிட்டுவிட்டு மற்றொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த காதலனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் பிரியங்கா. இவரும், குரால் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது பல இடங்களுக்கு காதலியை அழைத்து சென்ற ஜெகதீஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம்...

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

கூக்குளில் தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்:

கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பு அம்சம். உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக் கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது....

புதன், 8 ஏப்ரல், 2015

தாயுடன் 3ஆண்டிற்கு பிறகு சேர்ந்த குட்டி யானையின் கொண்டாட்டம்!!!

தாய்லாந்து வனப்பகுதியில் தாயுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த மி-பாய் என்ற மூன்று வயது பெண் யானையை கடந்த 2011-ம் ஆண்டு கடத்தி சென்ற சிலர் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் கட்டண சேவைக்கு அதை பயன்படுத்தி வந்தனர். ஓய்வே இல்லாமல் இந்த பணியை செய்துவந்த மி-பாய் களைத்துப் போய் சவாரி ஏற்றி செல்ல மறுத்த வேளைகளில் அடித்து சித்ரவதை செய்து தங்களது வாடிக்கையாளர்களை அவர்கள் மகிழ்வித்தனர். இதனால் வற்றலும் தொற்றலுமாக நைந்துப்போன மி-பாயை கண்ட வன விலங்கு ஆர்வலர்கள்...

திங்கள், 6 ஏப்ரல், 2015

O/L பரீட்சையில் தெரிவாகியுள்ளா மாணவன்..

பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் படிக்கும் போது பார்வையிழந்த மாணவன் ஒருவர் ப்ரெய்லி எழுத்து மூலம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சாதனை படைத்துள்ளார். கடுவலை கொத்தலாவல கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் படித்து கொண்டிருந்த ஹர்ச நிலுபுல் நயனப்பிரிய என்ற மாணவன் திடீரென நரம்பு வியாதி காரணமாக பார்வை இழந்தார்.  இதனையடுத்து பெற்றோர் மாணவனை பார்வையற்றோர் படிக்கும் பாடசாலையில் சேர்த்துள்ளனர். இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் ப்பிரெய்லி எழுத்து முறையில் தேர்வு...