கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே திருமண நாளில் காதலியை கைவிட்டுவிட்டு மற்றொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் பிரியங்கா. இவரும், குரால் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
அப்போது பல இடங்களுக்கு காதலியை அழைத்து சென்ற ஜெகதீஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதில் பிரியங்கா கர்ப்பமானார். இதையடுத்து அவர் திருமணத்துக்கு வற்புறுத்திய நிலையில், ஜெகதீஷ் மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்துள்ளார்.
இந்த விவகாரம் பிரியங்கா பெற்றோருக்கு தெரிய வரவே, ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இரு குடும்பத்தாரும் பேசி கடந்த 17 ஆம் தேதி கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் சிவன் கோயிலில் பிரியங்கா – ஜெகதீசுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 17 ஆம் தேதி கோயிலில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் திரண்டனர். ஆனால் வெகுநேரமாகியும் ஜெகதீஷ் வரவில்லை. விசாரித்த போது அவர் மணிமேகலை என்பவரை திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இதனால் காதலி் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பிரியங்கா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, ஜெகதீசை கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக