கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில், புகையிரதத்துடன் கார் மோதி விபத்திற்குள்ளாகியதில், நால்வர் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புகையிரதத்துடன், கார் மோதியதில் இன்று பிற்பகல் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் நால்வரும் களுத்துறை பகுதியைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக