
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, வெல்லாவெளி மண்டூரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில் அரச பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தரான
சச்சிதானந்தம் மதிதயான் (வயது 44) என்ற உத்தியோகஸ்தர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார்.
வீட்டினில் வைத்து சுடப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையினில் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்....