siruppiddy

புதன், 23 டிசம்பர், 2015

மாணவர்களுக்கு ஹெரோயின் விற்க முயன்றவர்கள் கைது

யாழ்.பாடசாலை ஒன்றின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்.பொலிஸாரினால் 4 சந்தேக நபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது, இவர்களின் உடமையில் இருந்து 9கட்டு ஹெரோயின் பைகளினையும் பொலிஸார்  மீட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் சங்கரப்பிள்ளை வீதி, ஆணைக்கோட்டை, மற்றும் இனுவில் தெற்கு பகுதியினை...

புதன், 9 டிசம்பர், 2015

பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்னை இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் வியாபார நிலையம் ஒன்றிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர். குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி சந்திப் பகுதியில் உள்ள கண்ணன் ஸ்ரோர்ஸ் என்னும் வியாபார நிலையத்தில் பெண்ணெருவர் நீண்ட காலமாக  பணியாற்றி...

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் ஸ்தலத்திலே பலி !!!

யாழ்.புத்தூர் மீசாலை வீதியில்  இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே   உயிரிழந்துள்ளனர்.  இச்சம்பவத்தில் சின்னகுஞ்சு உதயராசா (வயது – 55), ஜேசு அன்பு (வயது – 25) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவார். மேலும், இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் பயணித்த பேரூந்துடன்  மோதியதால்  இவ்விபத்து...

வியாழன், 3 டிசம்பர், 2015

பெண் துஷ்பிரயோகித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.!!!

ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று திரும்பிய 18 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மஹியங்கணையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் வேவத்தை, கந்தல்கும்புரவைச் சேர்ந்த ரம்யா விதர்ஷிணி எனும் 18 வயதான  பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த 3 மாதங்களாக ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளதோடு, இதற்காக ரிதிமாலியத்த, அலுகெட்டியாவ பிரதேசத்திலுள்ள தனது தாயின் சகோதரரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். நேற்று...