siruppiddy

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

குழந்தையை கொன்று 3 மாதம் வரை பதுக்கிய தாய்:???

பிறந்து சில மணி நேரமே ஆன தமது குழந்தையை கொன்று அதனுடன் 3 மாதங்கள் வரை தங்கியிருந்த பெண்ணை நண்பர் ஒருவரது உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர். நியூயோர்க் நகரின் Batavia பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் குடியிருந்து வருபவர் Christina Colantonio எனும் பெண்மணி. இவரது குடியிருப்பில் அடிக்கடி வந்து செல்லும் தோழி ஒருவருக்கு குழந்தை மீதும் அந்த தாயின் நடவடிக்கை மீதும் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து அவர் பொலிசாரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். தகவலறிந்து...

சனி, 29 ஆகஸ்ட், 2015

பல லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை! சந்நிதி தேர் உற்சவத்தில்

தொண்டமானாறு  சந்நிதியான் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவின் போது சுமார் சுமார் 10 இலட்சம் பெறுமதியான 22 பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படிச் சம்பவங்களை அடுத்து பெண் உட்பட இருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க தொண்டமானாறு சந்நிதியான் ஆலயத்தின் வருடாந்த உட்சபத்தின் தேர் திருவிழா நேற்று...

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

சந்தேகநபர்கள் மீது பொலிஸ் நிலையத்தில்சித்திரவதை! ! !

மன்னார் முருங்கன் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இரு சந்தேக நபர்களையும் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த மன்னார் நீதவான் இன்று  உத்தரவிட்டுள்ளார். நானாட்டான் பிரதேசச் செயலாளர்  பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு கிராமத்தைச் சேர்ந்த இரு சந்தேக நபர்கள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறி நேற்று மாலை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில்...

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

அதிவேகச் சாலையில் பாரிய விபத்து! போக்குவரத்து நெருசல்?

தெற்கு அதிவேகச் சாலையில் பாரிய விபத்தொன்று நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கெலனிகம-தொடங்கொட பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 28வது மைல் போஸ்ட் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக தெற்கு அதிவேகச் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு தொடக்கம் காலி வரையான ஒரு வழிப் பாதையில் நீண்ட தொலைவுக்கு அதிவேகச் சாலையில்...

சனி, 15 ஆகஸ்ட், 2015

2ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திரு திருமதி தேவராசா கனகாம்பிகை

அன்னை மடியில் : 22.12.1938— ஆண்டவன் அடியில் : 05.08 2013  திதி     சதுர்த்ததி  13.08-2015 யாழ். ராசாவின் தோட்டத்தை பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு திருமதி தேவராசா கனகாம்பிகை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. காலச்சுழற்சியில் ஈராண்டு கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது...

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை இன்றும் முதல்

சிறிலங்காவில் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை சிறிலங்காவில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் தென்னக்கோன், “பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் தற்போதைய நடைமுறையினால்,...

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

வரும் தேர்தல் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. அதற்கமைய வடமேல் மாகாணத்திலுள்ள அரச அதிகாரிகளை தெளிவூட்டும் நடவடிக்கை இன்று (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா  குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் ஒன்றிணைந்து தெளிவூட்டுல் நடவடிக்கையை...

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கண்ணில் வசித்துவந்த புழு: வெற்றிகரமாக வெளியே எடுத்த மருத்துவர்கள்

துபாய் நாட்டில் பெண் ஒருவரின் கண்ணில் இருந்து புழு அகற்றப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  துபாய் நாட்டை சேர்ந்த வினீதா என்ற பெண்மணி கண்ணிமையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண் இமையில் ஏதே பிரச்சனை உள்ளதாக உணர்ந்துள்ளனர். பின்னர் அவரது கண்ணில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது கண்ணீன் மேல் பகுதியில் இருந்து புழு ஒன்று அகற்றப்பட்டது. இது தொடர்பாக மருத்துவர்...

சனி, 1 ஆகஸ்ட், 2015

ஆசிரியை கன்டர் வாகனம் மோதி பரிதாப மரணம்???

மட்டக்களப்பு – கொம்மாதுறையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை பாலசுப்பிரமணியம் சதுக்கத்தைச் சேர்ந்த கலையரசி பாலச்சந்திரன் (வயது 58) எனும் ஐயங்கேணி தமிழ் வித்தியாலய ஆசிரியையே விபத்தில் பலியானவராவார். குறித்த ஆசிரியை அதிகாலை 4.20 மணியளவில் நெடுஞ்சாலையின் ஓரமாக உடற்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த போது வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எதிரே வந்த கன்ரர் ரக வாகனம்...