siruppiddy

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

நீராடியவர் மரணம்யாழ்கசூரினா கடலில் !!!

யாழ்.காரைநகர் கசூரினா கடலில் நேற்று மாலை உறவினர்களுடன் நீராடச் சென்ற சமயம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு நாவலடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான சண்முகம் பொன்னுத்துரை (வயது-66) என்பவரே மரணமானவராவார். சடலம் காரைநகர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்றிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள...

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

சகோதரத் திருநாள் ராக்கி""

சில வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.   தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு...

உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் இறக்குமதி

இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 15 ரூபாவாலும் அதாவது 25 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான இறக்குமதி வரி 5 ரூபாவாலும் அதாவது 30 ரூபாவில் இருந்து 35 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளத...

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மின் தாக்கி ஒருவர் பலி- காத்தான்குடியில் சம்பவம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்;குட்பட்ட காத்தான்குடி ஹக்குப்பிள்ளை லேனில் இன்று புதன்கிழமை தச்சு வேலை செய்து கொண்டிருந்த ஆரையம் பதியைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா (வயது 52) மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 5.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி இராசதுரைக் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா(வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி அவர்...

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

துப்பாக்கி சூடு :டொரண்டோவில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்

 கனடாவின் டொரண்டோவில் நடந்த இருவேறு துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் Overlea Boulevard and Don Mills Road பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் உணவு விடுதியொன்றில் ஆரம்பித்த வாய் சண்டை முற்றி வீதிக்கு வந்திருக்கலாம் எனவும்...