siruppiddy

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

துப்பாக்கி சூடு :டொரண்டோவில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்


 கனடாவின் டொரண்டோவில் நடந்த இருவேறு துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் Overlea Boulevard and Don Mills Road பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உணவு விடுதியொன்றில் ஆரம்பித்த வாய் சண்டை முற்றி வீதிக்கு வந்திருக்கலாம் எனவும் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கறுப்பு நிற ஆடைகள் அணிந்திருந்த 4 கறுப்பு நிற இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் அப்பகுதியில் பொலிசார் தேடிவருகின்றனர்.
மேலும் வடகிழக்கு பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கி சூட்டில் 21 வயது மதிக்கத்தக்க யூசுப் அகமது என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும், இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக