siruppiddy

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மின் தாக்கி ஒருவர் பலி- காத்தான்குடியில் சம்பவம்


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்;குட்பட்ட காத்தான்குடி ஹக்குப்பிள்ளை லேனில் இன்று புதன்கிழமை தச்சு வேலை செய்து கொண்டிருந்த ஆரையம் பதியைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா (வயது 52) மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 5.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி இராசதுரைக் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா(வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலம் காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த சடலம் நாளை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக