யாழ்.காரைநகர் கசூரினா கடலில் நேற்று மாலை உறவினர்களுடன் நீராடச் சென்ற சமயம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு நாவலடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான சண்முகம் பொன்னுத்துரை (வயது-66) என்பவரே மரணமானவராவார்.
சடலம் காரைநகர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்றிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக