siruppiddy

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் இறக்குமதி


இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 15 ரூபாவாலும் அதாவது 25 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான இறக்குமதி வரி 5 ரூபாவாலும் அதாவது 30 ரூபாவில் இருந்து 35 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக