siruppiddy

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

லொறியுடன் கா ர் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்

 வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். காலை 6 மணியளவில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த கார் லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்படுகையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன்போது காரில் பயணித்த ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்...

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மின்னல்,இடி, காற்றுடன் மழை பெய்யும்

இலங்கையில் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இருந்திருந்து பலத்த காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிரதேசங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் காலி முதல் பொத்துவில் வரையில் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

திங்கள், 22 செப்டம்பர், 2014

மூவர் காயம் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில்

கொழும்பில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பொரளை – கின்ஸி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 12 மோட்டார் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.காயமடைந்தவர்கள் கொழும்ப தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சற்று முன்னர் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரம் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாகனங்களுக்கு...

புதன், 17 செப்டம்பர், 2014

வைரவர் ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீட்பு!

திருநெல்வேலி - கேணியடி வைரவர் ஆலயத்திற்கு அருகில் கேட்பாரற்றுக் கிடந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிசார் நேற்று இரவு மீட்டுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த இருவார காலத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் ஆலயத்திற்கு அருகில் காணப்படுவதாகவும் பகல் வேளைகளில் இருப்பதில்லை எனவும் அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்றைய தினமும் மோட்டார் சைக்கிள் அங்கு கிடந்ததை அடுத்து கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார்...

திங்கள், 15 செப்டம்பர், 2014

பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள் வீட்டிலேயே உண்டு

 உலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் போட்டால் போதும், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு மறைய ஓடும். அப்படி மறைய ஓடும் கரப்பான் பூச்சிகள், சமையலறையில் உள்ள ஷெல்ப், கேபினட் மற்றும் சின்க் போன்ற இங்களில் தான் மறைந்து கொள்ளும். இப்படி வீட்டில்...

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

ஆர்ப்பாட்டம் செய்த 54 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

 இறக்குவானை நகரில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்ட 54 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறக்குவானை டெல்வின் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர்  கடந்த ஜுலை மாதம் 20 ஆம் திகதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஜூலை 21 ஆம் திகதி இறக்குவாணை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த   54 பேரை மூன்று கட்டங்களாக   ...

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

சிவதர்ஷன் சடலம் தொடர்பாக விசாரணை!

¨  மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்து மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். லிந்துலை – மட்டுக்கலை தோட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படும் மாணவன் ஒருவரின் சடலமே இன்று காலை 7.30 அளவில் பிரதேச மக்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் யோகநாதன் சிவதர்ஷன் என்ற மாணவன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  ...

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

களம்பல காண்போம்’விமல் சொக்கநாதன் அவர்கள் வழங்கும் ??

மீண்டும் நல்ல படைப்பாளிகளுடன் தன்னை வளப்படுத்தி நிற்கும் ஐபிசி-தமிழ் வானொலி தற்பொழுது தனது நேயர்களிடம் நிறைவான வரவேற்பைப் பெற்று வருகிறது, உலகத் தமிழ் மக்களுக்கான வானொலியாக தன்னை நிலை நிறுத்திவருகிறது, வரலாற்றுத்தடங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட ஐபிசி-தமிழ். தனது பாதையில் பயணித்து வருகிறது, தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நன்கு அறிமுகமான மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் வழங்கும் ‘களம்பல காண்போம்’ அரசியல் விமர்சன நிகழ்ச்சி. சுமார் 10...

புதன், 3 செப்டம்பர், 2014

படகு போட்டி தீவகப்பகுதியில் !

 ஊர்காவற்துறை தம்பாட்டி காந்திஜி விளையாட்டு கழகம், கடற்தொழிலாளர் சங்கங்கள், காந்திஜி சனசமூக நிலையமும் இணைந்து 64வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தி வரும் விளையாட்டுப் போட்டிகளில் இன்று கடல்சார் போட்டியான பாய் விரித்து படகோட்டும் போட்டி தீவக படகுகளுக்கு இடையே நடைபெற்றுள்ளது.   இதில் இரு அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டிக்குரிய படகுகள் யாவும் தம்பாட்டியிலிருந்து புறப்பட்டு அராலி துறைக்கு சென்று அங்கிருந்து போட்டிகள் ஆரம்பமாகின. போட்டியை...