siruppiddy

செவ்வாய், 16 டிசம்பர், 2014

நீரில் கலக்கும் கழிவுகள்: அபாயமாகும் அடுத்த சந்ததியினர்

யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீரில் மலம், ஈயம், நச்சு உலோகம், கழிவு எண்ணை ஆகியன கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதனால் குடாநாட்டில் வாழும் 4லட்சம் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக, யாழ்.மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அதிகாரி சிவகணேஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஆய்வு சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
நிகழ்வில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தின் நீர்ப்படுக்கைகள் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது வலிகாமம் நீர்ப்படுகையில் மலம், கழிவு எண்ணை, ஈயம், நச்சு உலோகங்கள், என்பன கலந்திருக்கின்றது. இதனை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
இந்த நீரைப் பருகும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத் தன்மை, மூளை வளர்ச்சி குறைதல், சிறுநீரகப் பாதிப்பு, குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல் போன்ற பல சிக்கல்கள்
உருவாகும். இதனால் வலிகாமம் பகுதியில் 4லட்சம் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனினும் நோய்த் தாக்க அறிகுறிகளை இன்னமும் 5 தொடக்கம் 10 வருடங்களிலேயே உணர்ந்து கொள்ள முடியும். எனவே இந்த மிகப்பெரிய பாதிப்புக்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அவசியமாகின்றது என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக