siruppiddy

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

தவறணையை சேதப்படுத்திய பெண்களுக்கு எச்சரிக்கை!

சமூகசீர்கேடான பிரச்சினைகள் தலைதூக்கும் போது அவற்றை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி முடிவுக்கு கொண்டு வருவதை விடுத்து சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயற்படுவதை சட்டம் பார்த்துக் கொண்டு இருக்காது என மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் 54 பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் மன்னார் இலுப்பைக்கடவை அந்தோனியார் புரப்பகுதியில் கள்ளுத் தவறணையில் போத்தல் கள்ளு விற்பனை செய்யப்படுவதால் தங்கள் கணவர்மார் அதை குடித்துவிட்டு வீடு திரும்பும்போது குடும்ப அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதை பொறுக்க முடியாத அக்கிராம பெண்கள் கூட்டம் கடந்த மாதம் 16ஆம் திகதி போத்தல் கள்ளு விற்பனை செய்த தவறணைக்குள் புகுந்து சேதப்படுத்தினர் என 54 பெண்களைப் பொலிஸாரால் கைது செய்தனர். இவர்களை இலுப்பைக்கடவை பொலிஸார் கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் முற்படுத்தியபோது நீதிபதி அந்தப் பெண்களை நோக்கி - இந்த நாட்டில் சட்டதிட்டங்கள் உண்டு. ஓர் இடத்தில் சமூக சீர்கேடான சம்பவங்கள் இடம்பெறும்போது முதலில் அவற்றை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையாளப்பட வேண்டும். அன்றேல் அதற்காக சட்ட வழிகள் இருக்கின்றன. அதன்படி நடந்துகொள்ளவேண்டும். அதைவிடுத்து நீங்களே சட்டங்களை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு அமைதிக்கு பங்கம் விளைவிப்பதை சட்டம் வெறுமனமே பார்த்துக் கொண்டிருக்காது. இனிமேல் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் பட்சத்தில் நீங்கள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையே உருவாகும் என எச்சரித்து அனைவரையும் பத்தாயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தார இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக