siruppiddy

திங்கள், 7 நவம்பர், 2016

21 வயது மாணவன் சாதனை யாழ் மண்ணில்

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் க. பொ.த உயர்தரத்தில் கல்வி பயின்று 'வயம்ப' பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவனான மு. நவரத்தின கஜன் தனது 21 ஆவது வயதில் பொறியியல் தொழில் நுட்ப பாடத்தில் ஒரு பகுதியான 'நில அளவை' என்ற நூலை வெளியீடு செய்து சாதனை படைத்து, கல்வியிலாளர்கள் உட்படப் பலரதும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். மேற்படி நூலின் வெளியீட்டு விழா இன்று (05) முற்பகல் யாழ். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ துர்க்கா பொதுநோக்கு மண்டபத்தில் ஓய்வு நிலை...

திங்கள், 24 அக்டோபர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா .24.10.16

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி . சுதாகரன்(சுதா) (யசோ)  தம்பதிகளின்.செல்வப்புதல்வி  சுருதிகா.{சுருதி}.வின் பதின் மூன்றாவது   பிறந்த நாள் 24.10.16 .இன்று தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்  உற்றார் உறவினர்கள்...

சனி, 22 அக்டோபர், 2016

மரண அறிவித்தல் அமரர் தம்பு ஜெயரத்தினம் (நயினார் )

இறப்பு : 21 ஒக்டொபர்  2016  யாழ்.  நவக்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்   தற்காலி  வசிப்பிடமாக கோப்பாயை  கொண்ட தம்பு ஜெயரத்தினம் (நயினார் )அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை  அன்று  காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பு  மாணிக்கம் தம்பதிகளின் அன்புக்கடைசி   மகனும் , காலஞ்சென்ற .திருமதி கமலாதேவி   அவர்களின் அன்பு கணவரும்  செந்தூர்செல்வன் பிறேமாவதி  காலஞ்சென்ற...

வியாழன், 13 அக்டோபர், 2016

பட்டா ரக வாகனம் கிளிநொச்சியில் இன்று பயங்கர விபத்து

நேற்று மாலை3.00மணியளவில் கிளிநொச்சியிலுருந்து வவுனியாவிற்கு பப்பாசிபழங்களை விற்பனைக்காக ஏற்றி வந்த பட்டா ரக வாகனம் ஒன்று கொக்காவில் பகுதியில் வாகனத்தின் டயர்  திடீரென காற்று போனதால் வாகனம் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன் சாரதி  சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

கணேசபுரத்தில் பாம்பு கடித்து 14வயது மாணவி உயிரிழப்பு

வவுனியா கணேசபுரம் பகுதியிருலுள்ள விநாயகர் வித்தியாலயத்தின் மாணவி ஒருவருக்கு நேற்று பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று அதிகாலை குறித்த மாணவிக்கு வீட்டில் படுத்திருந்தவேளை  பாம்பு கடித்துள்ளது. எனினும் . கடித்தது பாம்பு என்று தெரியவரவில்லை. நேற்று பகல் 11 மணியளவில் மாணவிக்கு வாந்தி, வயிற்றுவலி என்பன தொடங்கியுள்ளது. உடனடியாக வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்....

செவ்வாய், 4 அக்டோபர், 2016

நிர்மாணப் பணியில் ஈடுபட்ட பொறியியலாளர்மின்சாரம் தாக்கி மரணம்!

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 03.10.2016  திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி காவல் துறையினர்   தெரிவித்தனர். அவசரஅவசரமாக இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய கனகராசா கோபிநாத்  என்ற   பொ றியியலாளர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சடலம்...

புதன், 28 செப்டம்பர், 2016

கேரளா கஞ்சா மருதங்கேணி கடற்கரையில் மீட்பு!

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவை மருதங்கேணி கடற்கரையில் வைத்து பளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.எனினும் குறித்த சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பளைப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய  வருவதாவது, இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரள கஞ்சா ஒரு தொகுதி மருதங்கேணி கடற்பரப்பினூடாக கொண்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதைத்...

திங்கள், 26 செப்டம்பர், 2016

சிறுவர்கள் வாகன விபத்தில் பரிதாபகரமாக பலி !

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக முறையில் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (25) பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்களும் உயிர் இழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் கூறியுள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று...

அமரர் இரத்தினம் பாலகிருஷ்ணன்.1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு : 7 யூலை 1960 — இறப்பு : 24 செப்ரெம்பர் 2015 யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பாலகிருஷ்ணன். (செல்வம்) அவர்களின் முதலாம்ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் அன்பு அப்பாவே  இதயத் துடிப்பின் அருமருந்தே  காலம் செய்த கோலத்தினால்  ஓவ்வொரு கணப் பொழுதும்  துடிக்கின்றோம்! ஆண்டொன்று ஆனாலும் மனம்  ஆற மறுக்கிறது- அப்பா  புன்னகை புரியும் உங்கள்  முகம்...

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லுாரியின் மாணவி தற்கொலை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை – நகுலேஸ்வரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை மஹாஜன கல்லூரியில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் போது வீட்டில் அவரது பெற்றோர் இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது. மன உளைச்சல் காரணமாக குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறை...

புதன், 21 செப்டம்பர், 2016

இலங்கைத் தமிழர் அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி !

அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் டாங்கிகள் வடிவமைப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்  கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பட்டம் பெற்றதுடன், 1982-83...

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

மரண அறிவித்தல் திரு மகிந்தன் பன்னீர்ச்செல்வம்(முகுந்தன்)

தோற்றம் : 20 யூன் 1972 — மறைவு : 10 செப்ரெம்பர் 2016 யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Helsingborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தன் பன்னீர்ச்செல்வம்.(முகுந்தன் முன்னாள் விளையாட்டு மூத்த உறுப்பினர் - Helsingborg)அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம், புஸ்பலீலா(இந்தியா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அழகசுந்தரம், சாந்தகுமாரி(சுவீடன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், சர்மிளா...

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மரண அறிவித்தல் திரு கந்தையா தம்பிஐயா.06.'09.16.

பிறப்பு : 3 யூன் 1924 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2016 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிஐயா அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், ஜெகதீஷ்வரன், ஜெகதீஷ்வரி, மலர்சோதி, தயாபரன், அருளானந்தம்,...

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

இளைஞன்யாழில் இடம்பெற்ற விபத்து! உயிர் தப்பினர் !

யாழ். சாவகச்சேரி பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் பாரியளவு சேதமடைந்துள்ள போதிலும், அதில் பயணித்தவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக...

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

மரண அறிவித்தல் அமரர் திருமதி சின்னத்தம்பி பூமணி

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2016 யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பூமணி அவர்கள் 17-08-2016 புதன்கிழமை அன்று  காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி மயில்வாகனம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், சிவானந்தம், கெளரி, சிவகணேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான...

சனி, 16 ஜூலை, 2016

ஒழுங்கற்ற முறையில் நடந்த படை சிப்பாய்கள் இருவர் கைது!

மனைவியுடன் சண்டையிட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் ஆனமடுவ பொலிஸாரினாலும், மது அருந்திவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கருவலகஸ்வேவ பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இந்த கைது இடம்பெற்றுள்ளது. கடற்படை சிப்பாயான தனது கணவர் தன்னுடன் சண்டையிட்டதாக மனைவியினால் ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபரான கடற்படை சிப்பாய் பருத்தித்துறை வடக்கு கடற்படை முகாமில்...

வியாழன், 30 ஜூன், 2016

புத்தூர் மீசாலை வீதி விபத்தில் இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் வீதியில் வேம்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களை ஏற்றிவந்த லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதி ஓரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர் மீது  மோதியுள்ளது. சம்பவத்தில்...

புதன், 22 ஜூன், 2016

நிந்தவூரில்சிகிச்சைக்கு சென்ற சிறுமி துஷ்ப்பிரயோகம் வைத்தியர் கைது

அம்பாறை நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வைத்தியர் 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே நேற்று (20) இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சுகயீனம் காரணமாக வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்ற போதே குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட...

புதன், 15 ஜூன், 2016

யாழில் வங்கி ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவம் இது

யாழ். நகரில் பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியை ஒருவர் அந்தக் கிளையில் கணக்கினைப் பேணி வந்துள்ளார். அவரது மாதந்த சம்பளமும் அந்தக் கணக்குக்கே வருவது  வழமை. அடிக்கடி பணத்தைப் பெறும் வழமை அவருக்கு இல்லாத போதிலும் மாதந்தோறும் மீதியைச் சரிபார்க்கத் தவறுவதில்லை. வழக்கம் போலவே மீதியைச் சரிபார்க்கச் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி. “தோல் இருக்கச் சுளை விழுங்கப்பட்டது” போல வங்கிப் புத்தகமும் தன்னியக்கப் பணப்பரிமாற்ற அட்டையும் ( ஏ.ரி.எம்)...

புதன், 8 ஜூன், 2016

கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்தா என்பது தொடர்பில் பரிசோதனை

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தையடுத்து, வெடிப்பு இடம்பெற்ற இடத்தை சுற்றியுள்ள பிரசேதங்களில் உள்ள கிணற்று நீரை ஆய்வு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்தா என்பது தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக சுகாதார அதிகாரிகளின் ஊடாக கிணறுகளின் நீர் மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> ...

சனி, 4 ஜூன், 2016

மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினைமுன்னிட்டு ?

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டி நடந்தேறியது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணண பாடசாலைகளக்கிடையில் நடாத்தப்பட்ட மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் பெண்கள் பிரிவில் வேம்படி மகளீர் கல்லூரியும் சம்பியனாகியது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணண பாடசாலைகளக்கிடையில்...

வியாழன், 2 ஜூன், 2016

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.16.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா) அவரின்  பிறந்த நாள் இன்று. 02.06.2016. மிக தனது இல்லத்தில்  சிறப்பாக குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றனர் .இவரை  அன்பு மனைவி  மகள் மகன்  அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார்...

ஞாயிறு, 29 மே, 2016

நவற்கிரி புத்தூரில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!!

யாழ் நவற்கிரியில் எல்லாளன் சனசமூகநிலையத்திற்கு அருகாமையில் திரு கோணராஜா பார்த்தீபன் எனும் 31வயது இளைஞன்  தங்களது  வீட்டுக்குள் இன்று 28.02.2016.காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>...

வியாழன், 26 மே, 2016

விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து மாணவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அராலி தெற்கைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெசிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இந்த மாணவன் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. மாணவனின் சடலம் பிரேத...