siruppiddy

புதன், 29 அக்டோபர், 2014

ஜய வருடத்தில் (2014) நிகழும் முக்கிய கிரக நிலை மாற்றமான சனிப்பெயர்ச்சி

   பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் கணித்து எழுதியுள்ள விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம். சனிப்பெயர்ச்சி: நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில்...

சனி, 25 அக்டோபர், 2014

பெண்ணொருவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று பாலியல்

வீடு செல்­வ­தற்­காக பஸ் நிலை­யத்தில் நின்ற பெண் ஒரு­வரை முச்­சக்­க­ர­வண்­டியில் வந்த அயல் வீட்டைச் சேர்ந்த நப­ரொ­ருவர் வீட்டில் விடு­வ­தாகக் கூறி பாழ­டைந்த இடம் ஒன்­றிற்கு அழைத்துச் சென்று பல­வந்­த­மாக பாலியல் குற்றம் புரிந்த பின் கைவிட்டுச் சென்ற சம்­பவமொன்று பற்றி கண்டி பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது. கண்டி குட்ஷெட் பஸ் நிலை­யத்தில்  வீடு செல்­வ­தற்­காக நின்று கொண்­டி­ருந்த 28 வயது பெண் ஒரு­வரை அயல்­வா­சி­யான நபர் ஒருவர் முச்­சக்­கர...

திங்கள், 20 அக்டோபர், 2014

இலங்கைப்போக்குவரத்துச் சபை பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல்!

மீண்டும் இலங்கைப்போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு பேரூந்துகள் மீது நேற்று இரவும் வடமராட்சியின் முள்ளிப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் ஆட்கள் நடமாட்டமற்ற முள்ளிப்பகுதியில்...

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிப்பு கண்டனம்!

 வடமாகாணத்துக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரித்தானியா கண்டனம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் சிறிலங்காவுக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2011ம் ஆண்டு வடக்கிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட போது,அதனை பிரித்தானியா வரவேற்றிருந்தது. இது பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு, யுத்தம் நிறைவடைந்த...

புதன், 15 அக்டோபர், 2014

வவுனியா கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

வவுனியா ஸ்ரீநகர் கைத்தொழில் பேட்டையிலுள்ள உருக்குவேலை கடையொன்றில் நேற்று பிற்பகல் தீபரவியுள்ளது. தீயினால் கடையிலிருந்து பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றார். கடை ஊழியர்கள் மதிப போசனத்திற்காக வெளியில் சென்றிருந்தபோதே தீ பரவியுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளன. மின்சார ஒழுக்கின் காரணமாகவே தீ பற்றியுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். ...

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கிணற்றை தோண்டிய போது மண் சரிந்து குடும்பஸ்தர் பலி!

 வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றை தோண்டிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.  மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் பரிகாரியார் வீதியில் வசித்த வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் முத்துலிங்கம் (வயது –...

சனி, 11 அக்டோபர், 2014

இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் கைது

 திருகோணமலை - குச்சவெளி - வடலிக்குளம் பகுதியில் இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 12 மற்றும் 13 வயது சிறுமிகளை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதான சந்தேகநபர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சிறுமிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து சட்ட...

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் விளக்கமறியலில்

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள ஊறாவெவ பகுதியில் பாடசாலை மாணவியை தூஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது 70 வயதான சந்தேகபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று திருகோணமலை பதில்...