siruppiddy

சனி, 27 டிசம்பர், 2014

பெறுமதியான கஞ்சாவை கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

  ரூபா1.44 கோடி  இந்திய ரூபா பெறுமதியான கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் தங்கச்சிமடத்தில் இருந்து கடத்தப்படவிருந்த கஞ்சா தொகையே கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். தலைமன்னார் மற்றும் கொழும்பை சேர்ந்தவர்களும் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இதில் அடங்குகின்றனர். தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது. இதேவேளை கடல்குதிரை உட்பட்ட...

செவ்வாய், 16 டிசம்பர், 2014

நீரில் கலக்கும் கழிவுகள்: அபாயமாகும் அடுத்த சந்ததியினர்

யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீரில் மலம், ஈயம், நச்சு உலோகம், கழிவு எண்ணை ஆகியன கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதனால் குடாநாட்டில் வாழும் 4லட்சம் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக, யாழ்.மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அதிகாரி சிவகணேஸ் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஆய்வு சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். நிகழ்வில்...

வியாழன், 11 டிசம்பர், 2014

அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள்ää இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆiணாயளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். எனவே தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பம் செய்ய முடியும்...

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

தவறணையை சேதப்படுத்திய பெண்களுக்கு எச்சரிக்கை!

சமூகசீர்கேடான பிரச்சினைகள் தலைதூக்கும் போது அவற்றை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி முடிவுக்கு கொண்டு வருவதை விடுத்து சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயற்படுவதை சட்டம் பார்த்துக் கொண்டு இருக்காது என மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் 54 பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் மன்னார் இலுப்பைக்கடவை அந்தோனியார் புரப்பகுதியில் கள்ளுத் தவறணையில் போத்தல் கள்ளு விற்பனை செய்யப்படுவதால் தங்கள் கணவர்மார் அதை குடித்துவிட்டு வீடு திரும்பும்போது குடும்ப...

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வலுக்கும் சட்டம் வீட்டில் குழந்தை பெத்துக்கோங்க:

பெண்களை வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தேசிய சுகாதார அமைப்பின் புதிய வழிகாட்டுதலின்படி, பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகளை மருத்துவமனைக்கு வெளியே பெற்றெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையைப் போலவே வீட்டிலும் பாதுகாப்பான பிரசவம் பார்க்க முடியும் என்றும் முதல் குழந்தையைப் பிரசுவிக்கும் பெண்களுக்கு மட்டும் வீட்டில் கூடுதல் கவனிப்பு தேவை என தேசிய...

வியாழன், 4 டிசம்பர், 2014

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

 படல்கும்புர பிரதேசத்தில் வைத்து  1000 ரூபா போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வைத்தே குறித்த சந்தேக  நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 51 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>...

செவ்வாய், 2 டிசம்பர், 2014

கடும் வெள்ளத்தினால், தோப்பு மக்கள் பாதிப்பு!

யாழ். குடாநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக சீரற்ற வீதீயமைப்பு சீர்குலைந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை கேட்போர் யாருமின்றி தவிக்கும் தோப்பு மக்கள் தோப்பு மாவட்டத்தில் கடும் மழையினால் இதுவரை பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது   இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>> ...

பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும்: பரீட்சை திணைக்களம்

 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். புள்ளிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதே...