siruppiddy

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

மின்சாரம் சட்டவிரோதமாக பெற்ற மூவருக்கு அபராதம் விதிப்பு

சட்டவிரோத முறையில் மின்சாரத்தை பெற்றுக்கொண்ட பாசையூர், கந்தர்மடம் மற்றும் அரியாலைப் பகுதிகளைச் சேர்ந்த மூவர் கடந்த 4 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 இது தொடர்பான வழக்கு  கடந்த 5 ஆம் திகதி  யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அவர்கள் மூவரும் தமக்கெதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து  35 ஆயிரம்  ரூபா அபராதம் செலுத்துமாறும், இலங்கை மின்சார சபைக்கு இழப்பீடாக 150,000ரூபாவைச் செலுத்துமாறும் நீதிவான் பெ.சிவகுமார் 
உத்தரவிட்டார்.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக