siruppiddy

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சிமெந்து யாழில் மக்களுக்கு இலவச விநியோகம்?

நாடளாவிய ரீதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திட்டத்தில், பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்காக வழங்கப்படும் பத்து சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கும் திட்டத்தில் யாழ்ப்பாணத்திலும் 1000 வீடுகள் உள்வாங்கப்படவுள்ளன.
இது தொடர்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவிக்கையில்:
யாழ்ப்பாணத்திலும் பூச்சு வேலைகள் முடிக்கப்படாத வீடுகளின் உரிமையாளர்கள் 1000 பேருக்கு இலவசமாக  10 சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கப்படவுள்ளன. 
பயனாளிகள் தெரிவிற்கான விண்ணப்பப்படிவங்கள் அந்தந்த கிராம அலுவலர்கள்  ஊடாக வழங்கப்பட்டுள்ளது.  இதற்காக குடும்பங்களை தெரிவு செய்யும் பணிகள் மாவட்ட செயலகத்தினால் நடத்தப்பட்டு தகவல்கள் தற்போது வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னர் சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கப்படும். இந்தப் பணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் நடைபெறும். அதன் பின்னர் நவம்பர் முதல் வாரத்தில் சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கப்படும்- என்றார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக