siruppiddy

திங்கள், 5 அக்டோபர், 2015

வாழைக்குலைத் திருடரால் விவசாயிகள் திண்டாடும்???

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கில் தொடரும் வாழைக்குலைத் திருட்டினால் வாழைச் செய்கையாளர்கள் செய்வதறியாது திண்டாடுகின்றார்கள். கடந்த வியாழக்கிழமை அதிகாலையிலும் சுமார் 25000 ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய வாழைக்குலைகள் திருடப்பட்டுள்ளன.
சுமார் 15 முதல் 20 வரையான வாழைக்குலைகள் புன்னாலைக்கட்டுவன் மஸ்கன் வீதியில் அமைந்துள்ள இரண்டு வாழைத் தோட்டங்களில் திருடிச் செல்லப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கிராம அலுவலர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வாழைக்குலைத் திருட்டுக்கள் 
சம்பந்தமாக முறையிட்டபோதிலும், இதனை கட்டுப்படுத்த ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதேச செயலாளர் முன்னிலையில் கூறிச் சமாளித்துள்ளார்கள். குறிப்பிட்ட விடயம் தொடர்பாகப் பொலிஸார் கூறிய சில மணித்தியாலங்களிலேயே இந்தக்களவுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக